*🏀மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்*
*🏀ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி*
*🏀தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன*
*🏀தற்போது, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி படிக்க, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, ஆங்கில வழி வகுப்புகளை, இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது*
*🏀இதனால், இரண்டு வகுப்புகள் கூடுதலாக நடத்தப்படும்.மாநில அளவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தப்படும்*
*🏀ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டம் வந்துள்ளதால், அம்மாணவர்கள், 'க்யூ ஆர் கோடு' மற்றும் இணையதளம் வழியே கல்வி பயில, கையடக்க கணினி எனும், 'டேப்' வழங்கப்படுகிறது*
*🏀இதற்காக, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த வாரம் டெண்டர் முடிவு செய்யப்படும். விரைவாக, 'டேப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக