பெற்றோர்களை கவனிக்கத் தவறினால் சொத்துகளைத் திரும்பப் பெறலாம்! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பெற்றோர்களை கவனிக்கத் தவறினால் சொத்துகளைத் திரும்பப் பெறலாம்! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


பெற்றோர்களைச் சரிவர கவனிக்கத் தவறினால் மகனுக்குக் கொடுத்த சொத்துகளைப் பெற்றோர் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் மனைவி 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார். மனைவி இறந்த பின்பு, மகன் மற்றும் மருமகளின் வற்புறுத்தலின் காரணமாக, தனது குடியிருப்பில் 50 சதவீதத்தை மகனுக்கு எழுதிக்கொடுத்துள்ளார் முதியவர். இதனையடுத்து 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரையும் அவரது மனைவியையும் மகன் சரிவர கவனிக்காமல் அவர்களைக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதியவர் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம் மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவரது மகன் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சித் மோரி மற்றும் அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை மற்றும் அவரது இரண்டாவது மனைவியைப் பராமரிக்க வேண்டியது மகனின் கடமை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், பெற்றோர் மற்றும் முதியவர்கள் பராமரிப்பு சட்டத்தைச் சுட்டிக்காட்டி மகன் பெற்றோர்களை முறையாகக் கவனிக்கத் தவறினால், அவருக்குக் கொடுத்த சொத்துகளைத் திரும்ப பெறப் பெற்றோருக்கு உரிமையுண்டு என்று தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here