அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த வள்ள நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பினார். அதில், 1986 ஆம் ஆண்டுபிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் தங்கள் பெயர் பட்டையை அணிந்திருக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு தானாக முன் வந்து இந்த வழக்கை நேற்று(ஜூலை 16) விசாரணை செய்தது. அப்போது, பெயர் பட்டை அணியும் பழைய நடைமுறைக்கு பதிலாக தற்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக