*அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலையில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை பெற்று தருவதாக, மாணவர்களை அணுகும் இடைத்தரகர்கள், இதற்காக, பெருமளவு கட்டணம் செலுத்த வேண்டும் என, பணம் பறிக்க முயல்வதாக தகவல்கள் வந்துள்ளன*
*மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும், மருத்துவ கவுன்சில் குழுவானது, இத்தகைய நடைமுறைகளை ஊக்குவிப்பதில்லை*
*எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இட ஒதுக்கீடுகள், நீட் தேர்வில் பெற்ற தரவரிசையின் அடிப்படையில், இணையதள கவுன்சிலிங் வாயிலாக நடைபெறுகின்றன. இணையதளம் வாயிலாகவே, அந்தந்த கல்லுாரிகளில் நிரப்பப்படும் இடங்களின் விவரமும் வெளியிடப்படுகிறது*
*எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர், இது போன்ற இடைத்தரகர்கள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்*
*இடைத்தரகர்களின் வலையில் வீழ்ந்து பணத்தை இழந்தால், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் மற்றும் மருத்துவ கவுன்சிலிங் குழுவோ பொறுப்பாகாது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக