💫தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

💫தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு*

*🌐தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

*🌐மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாக மொழிப பெயர்க்கப்பட்டதாக கூறி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்*

*🌐இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் தமிழில் எழுதிய அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டது*

*🌐மேலும் இதன் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடவும், அதுவரை கவுன்சலிங் நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்*

*🌐இதனைத் தொடர்ந்து நீட் கருணை மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு விளக்கங்களையும் கேட்க வேண்டும் எனக் கூறி ரங்கராஜன் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்*

*🌐இதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவித்தன*

*🌐இந்நிலையில் நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது*

*🌐அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது*

*🌐மேலும், மனுதாரர் ரங்கராஜன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here