மெக்சிகோவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மொரனா என்ற அந்தக் கட்சியின் தலைவரான ஆண்ட்ரூஸ் மனுவல் லோபஸ் ஒபிரடார் மெக்சிகோவின் அதிபராகப் பதவி ஏற்கிறார்.
ஞாயிறன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் மொரனா கட்சியின் தலைவரும் மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயருமான லோபஸ் ஒபிரடார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளுங்கட்சியான புரட்சிகக்ர கட்சியைவிட 30 விழுக்காடு ஓட்டுக்கள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் லோபஸ் ஒபிரடார் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நான் என்னுடைய பழைய வீட்டிலேயே தங்கிக்கொள்வேன் அதிபர் மாளிகையைக் கலைக்கூடமாக மாற்றுவேன். அதிபர் செல்லும் விமானமானது விற்கப்படும். அதிபர் ஊதியம் குறைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் நீண்டகாலப் பிரச்சினைகளான போதை மருந்துக்கும்பல்களையும் ஊழலையும் ஒழிப்பதை உறுதியாக மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே முரண்பாடுகள் நீடித்துவரும் நிலையில் இடதுசாரிக் கட்சி ஆளுங்கட்சியாகப் பதவி ஏற்றுள்ளது இரு நாடுகளின் உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்துமா அல்லது உறவுகளை நெருக்கமாக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் லோபஸ் ஒபிரடார் அதிபராக பதவி ஏற்றவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதால் இரு நாடுகளுக்கிடையே உறவுகள் சீரடைய வாய்ப்புள்ளது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக