சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர் சங்கம் சார்பில், சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், "தமிழக மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வழங்கும் வகையில், நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அதற்கான சிறப்பு மசோதாவை இயற்ற வேண்டும்" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக