கச்சா எண்ணெய் இருப்பை உயர்த்தத் திட்டம்! விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் விதமாகப் புதிதாக இரண்டு எண்ணெய் கிடங்குகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கச்சா எண்ணெய் இருப்பை உயர்த்தத் திட்டம்! விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் விதமாகப் புதிதாக இரண்டு எண்ணெய் கிடங்குகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.


நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் இருப்பை 12 நாட்களாக உயர்த்தும் வகையில் புதிதாக இரண்டு எண்ணெய் கிடங்குகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் சண்டிகோலில் ஒரு கிடங்கும், கர்நாடகாவின் பதூரில் மற்றொரு கிடங்கும் அமைக்கப்படவுள்ளது. சண்டிகோல் கிடங்கில் 4.4 மில்லியன் டன் வரையிலான கச்சா எண்ணெய்யும், பதூரில் 2.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யும் தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. ஏற்கெனவே விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பதூரில் மூன்று கிடங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யைத் தேக்கி வைக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 80 விழுக்காடு எரிபொருள் தேவை இறக்குமதியை நம்பித்தான் உள்ளது. அண்மைக்காலமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்ட காலத்தில் வரியை உயர்த்தி, விலையைக் குறைக்காமல் இருந்த மோடி அரசு, இப்போது கச்சா எண்ணெய் விலை உயரும்போது வரியைக் குறைத்து விலை உயர்வைக் கட்டுப்படுத்த முன்வரவில்லை. இந்நிலையில் இப்போது கச்சா எண்ணெய் இருப்பை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here