நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்புப் போராட்டம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்புப் போராட்டம்!

தமிழகத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 9ந் தேதி கடையடைப்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 34774 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில்,3400 கடைகளில் பணியிடங்கள் காலியாகவுள்ளன. 500 கடைகளை மகளிர் குழுக்கள் நடத்தி வருகின்றனர்.

தமிழ் நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் முப்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகிறது. இவற்றில் முக்கியமான ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ந்தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளார்கள்.

நாம் மின்னம்பலம்.காம் சார்பாக நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயசந்திரனை தொடர்புகொண்டு போராட்டத்தைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர் கூறுகையில்,

“அரசுத்துறைகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், சம்பளம் ரூ 25 ஆயிரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நியாயவிலைக் கடைபணியாளர் பணிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி பன்னிரென்டாம் வகுப்பு

தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் சம்பளம் ரூ 10 ஆயிரம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகமான கல்வித்தகுதி உடையவருக்குக்

குறைந்த சம்பளம், குறைந்த கல்வித்தகுதி உள்ளவருக்கு அதிகமான சம்பளம். இது என்ன நீதி?

நியாயவிலைக் கடைகளில் சுமார் ஐந்து ஆண்டுக்கு முன்பு வழங்கிய எடைமிஷின்கள்தான் உள்ளது. அதை மாற்றிக்கொடுக்கவேண்டும், காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும், சம்பளம் உயர்வு வழங்கவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ந் தேதி கடையடைப்பு செய்து வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தவிருக்கிறோம். இதில் 26 மாவட்டங்களிலுள்ள 20 ஆயிரம் ஊழியர்கள் பங்குபெறுகிறார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here