ரஜினி மன்றத்தோடு தமாகா இணைப்பா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரஜினி மன்றத்தோடு தமாகா இணைப்பா?

ரஜினி மக்கள் மன்றத்தோடு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இணையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பதிலளித்துள்ளார்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் இன்று (ஜூலை 1) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் கிடப்பில் உள்ளபோது பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு மட்டும் இவ்வளவு அவசரம் காட்டப்படுவது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.

ஆளுநரின் ஆய்வு என்பது தேவையில்லாத ஒன்று என்று குறிப்பிட்ட அவர், “ஆளுநரின் ஆய்வு தொடர்வதால் தேவையில்லாமல் தமிழக அரசின் நிதிதான் செலவாகிறது. தீர்வு எதுவும் கிடைக்கப்பெறுவதில்லை” என்று குறிப்பிட்டார்.

தமாகாவை ரஜினி மக்கள் மன்றத்தோடு இணைக்கப்போவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு,”இது பொய்யான தகவல், வெறும் கட்டுக்கதை. எங்களின் தனித்தன்மையை கண்டு பயந்து தமாகா மீது களங்கள் விளைவிக்க முயல்கிறார்கள். மக்கள் விரும்பும் நேர்மை, எளிமை, வெளிப்படைத்தன்மையான ஆட்சியை தமாகா மட்டுமே தரமுடியும்” என்று வாசன் பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here