*தமிழ் இணைய செய்திகள்* இன்று நடைபெற்ற (01/07/2018)முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் மூன்று பேருக்கு அனுமதி மறுப்பு! *CLICK HERE TO READ MORE* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*தமிழ் இணைய செய்திகள்* இன்று நடைபெற்ற (01/07/2018)முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் மூன்று பேருக்கு அனுமதி மறுப்பு! *CLICK HERE TO READ MORE*

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று (ஜூலை 1) நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் மூன்று பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்களிடமிருந்து ஜூன் 11ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்திருந்தன.

கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஒரு திருநங்கை விண்ணப்பம் உட்பட 27 ஆயிரத்து 417 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்குக் கலந்தாய்வு தொடங்கப்படும் என அறிவித்த நிலையில், தாமதமாக 11 மணிக்குத் தொடங்கப்பட்டது. இன்று நடைபெற்ற கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் தானா என்பதை மருத்துவர் பரிசோதித்து சான்றிதழ் அளித்தனர். அதன்பின்னர் அவர்கள், கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கலந்தாய்வுக்கு இன்று வந்த மாற்றுத்திறனாளி மாணவர்களில் 3 பேர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்களது பெயர் இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்க்காமல், பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ் சரியாக இல்லாததாலும் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நீட் மதிப்பெண் சான்றிதழ், நீட் தேர்வு நுழைவுச் சீட்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here