*அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க, 'ஆன்லைன்'கவுன்சிலிங் நடந்து வருகிறது*
*முதற்கட்ட ஆன்லைன் கவுன்சிலிங், ஜூலை, 25 முதல், 30 வரை நடந்தது. இதில், 190 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றவர்களில், 6,768 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்*
*இரண்டாம் சுற்றில், 175 வரை, கட் - ஆப் மதிப்பெண் பெற்ற, 18 ஆயிரத்து, 513 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 13 ஆயிரத்து, 288 பேர் மட்டும், கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்; 12 ஆயிரத்து, 206 பேர் ஒதுக்கீடு பெற்றனர்*
*இதுவரை நடந்த, இரண்டு சுற்று கவுன்சிலிங்கில், மொத்தம், 18 ஆயிரத்து, 974 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். விண்ணப்பித்தவர்களில், 10 ஆயிரம் பேர் கவுன்சிலிங்கில் இடங்களை பெறவில்லை*
*மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கிற்கு, 25 ஆயிரம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்*
*அவர்களுக்கு, நேற்று முன்தினம் விருப்ப பதிவு துவங்கியது*
*இன்று மாலை, 5:00 மணியுடன் பதிவு முடிகிறது*
*இன்று இரவில், மாணவர்களின் விருப்ப பதிவு, தரவரிசை மற்றும் காலியிடங்கள் அடிப்படையில், இடங்கள் ஒதுக்கப்படும்*
*ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், 8ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், அந்த இடங்களுக்கு, ஆன்லைனில் ஒப்புதல் தர வேண்டும்*
*அதன்பின், 9ம் தேதி அதிகாலையில், இறுதி இட ஒதுக்கீடு ஆணை, இ - மெயிலில் அனுப்பப்படும்*
*முதல் சுற்றில், முன்னணி கல்லுாரிகளை தேர்வு செய்வதில், மாண வர்கள் இடையே கடும் போட்டி நிலவியது*
*இதனால், பல மாணவர்களுக்கு அவர்களின் விருப்ப பட்டியலில், 65 வரை இடம் பெற்ற கல்லுாரிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டாம் சுற்றில் இந்த போட்டி குறைந்து உள்ளது. இதில், பெரும்பாலான மாணவர்களுக்கு, விருப்ப பதிவு பட்டியலில், முதலில் பதிவு செய்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவே கிடைத்துள்ளது*
*முதல் சுற்றில், முன்னணி கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை பெறுவதற்கு இருந்த போட்டி, இரண்டாம் சுற்றில் பெருமளவு குறைந்துள்ளதாக, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.அண்ணா பல்கலை எச்சரிக்கைஅண்ணா பல்கலையின் ஒவ்வொரு சுற்றின் முடிவுகளின்படி, எந்தெந்த கல்லுாரிகளில், எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விபரம், பல்கலையின், https://www.tnea.ac.in என்ற, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது*
*எந்த பாடப்பிரிவு, எந்த தரவரிசையில் இடம் பெறும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது என்ற விபரமும், அண்ணா பல்கலை சார்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது*
*ஆனால், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் இடங்கள் ஒதுக்கீடு மற்றும் காலியிட விபரங்களை, சிலர் தனியாக தயாரித்து, அண்ணா பல்கலையை போல, 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களிலும், அண்ணா பல்கலை பெயரை இணைத்துள்ள, வணிக ரீதியான இணையதளங்களிலும் வெளியிடுவதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி எச்சரித்துள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக