இந்தியாவிலேயே முதன்முறையாக
பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக