*🔴இந்தியாவில் இயங்கி வரும் 278 போலி பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் மக்களவையில் வெளியிட்டார்*
*🔴இந்த போலி கல்வி நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை என்றும், இவை மத்திய, மாநில அரசின் எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை என்றும், எந்த பாடப்பிரிவுகளை நடத்தவும் இவற்றுக்கு தகுதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது*
*🔴இந்த கல்வி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும் கல்விச் சான்றிதழ்கள் செல்லத்தக்கவை அல்ல என்றும், பொதுமக்கள் இதுபோன்ற போலி கல்வி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது*
*🔴இந்தியாவிலேயே அதிக போலி நிறுவனங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தில்லி முதல் இடத்தில் உள்ளது*
*🔴இங்கு மட்டும் 66 போலி கல்வி நிறுவனங்கள் உள்ளன. அடுத்து தெலங்கானவில் 35ம், மேற்கு வங்கத்தில் 27ம், கர்நாடகாவில் 23ம், உத்தரப்பிரதேசத்தில் 22ம், இமாச்சலில் 18 போலி நிறுவனங்களும் உள்ளன*
*🔴தமிழகத்தில் 11 போலி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது*
*🔴அந்த 11 போலி கல்வி நிறுவனங்களின் பட்டியல் இது*
டாக்டர் ஜெஸ்ஸி ஜியார்ஜ் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
மெரிட் ஸ்விஸ் ஆசியான் ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்.
ஐசிஎஃப்ஏஐ
இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அண்ட் மேனேஜ்மென்ட்
பிரைவேட் லிமிடட்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட்
ஸ்டேன்ஸ்ஃபீல்ட் ஸ்கூல் ஆப் பிசினஸ்
ராய் பிசினஸ் ஸ்கூல்
அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்
ஆகியவை இதில் அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக