திருத்தப்பட்ட விடைத்தாளும் சுருட்டப்பட்ட கோடிகளும்! வசூல் செய்யப்படும் பணத்தில் 60 சதவீதம் உமாவுக்கு. மீதி 40 சதவீதம் உமாவின் உத்தரவுக்கு செவி சாய்த்து உடந்தையாக இருக்கும் பேராசிரியர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டதாம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

திருத்தப்பட்ட விடைத்தாளும் சுருட்டப்பட்ட கோடிகளும்! வசூல் செய்யப்படும் பணத்தில் 60 சதவீதம் உமாவுக்கு. மீதி 40 சதவீதம் உமாவின் உத்தரவுக்கு செவி சாய்த்து உடந்தையாக இருக்கும் பேராசிரியர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டதாம்.



"அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்களை சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அப்படி உருவாக்கியவர் உமா. 2015 முதல் 2018 தொடக்கம் வரை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர் உமா. இவர் அந்தப் பொறுப்பில் இருக்கும்போது நடந்த ஊழல்தான் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அப்படி என்ன நடந்தது... எப்படி நடந்தது? அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஒருவரிடம் விசாரித்தோம்.
'தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் என்பவர்தான் ஒரு பல்கலைக்கழகத்தில் மிக முக்கியமானவர். ஆனால், எங்க பல்கலைக்கழகத்தின் சாபக்கேடு உமா அந்தப் பொறுப்புக்கு வந்ததுதான். அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியை எந்தப் பேராசிரியர் செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்கும் அதிகாரம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்குத்தான் உண்டு. அந்தப் பொறுப்புக்கு வந்த உமா, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு விடைத்தாளையும் யார் திருத்த வேண்டும் எனக் கொடுத்த பட்டியலில் இருக்கும் பேராசிரியர்களே வேல்யுவேஷனுக்கு அனுமதிக்கப்பட்டனர். 2016ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் தேர்ச்சி விழுக்காடு குறைந்தது. அதாவது குறைய வைக்கப்பட்டது. மதிப்பெண்கள் குறைவாகப் போட்டு மாணவர்கள் பெயில் ஆக்கப்பட்டனர். 'நான் நல்லாதானே எழுதினேன்... எப்படி பெயில் ஆனேன்' என்று ரீ வேல்யூவேன்ஷனுக்கு அதாவது மறு கூட்டலுக்கு வரும் மாணவர்கள்தான் உமாவின் டார்கெட். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போதே, பல்கலைக்கழகத்தில் உள்ள சிலர் மூலமாக பேரம் தொடங்கும். 'ஒரு பேப்பருக்கு 10 ஆயிரம் ரூபாய்... எவ்வளவு மார்க் வேணும்?' எனக் கேட்பார்கள். மாணவர்கள் பலரும் இதற்குச் சம்மதித்தபடி பேப்பருக்கு 10 ஆயிரம் கொடுப்பார்கள். இப்படி ஒருவர் அல்ல, இருவர் அல்ல... லட்சக்கணக்கான மாணவர்களிடம் வசூல் நடந்திருக்கிறது.
அதாவது 600 கோடி வரை இதில் மோசடி நடந்திருக்கிறது என்றால் எவ்வளவு பேரிடம் வசூல் நடந்திருக்கும் என்பதை நீங்களே கணக்கு போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படித்தான் கடந்த 3 வருடங்களாக மாணவர்கள் பெயில் ஆக்கப்படுவதும் பணம் கொடுத்தால் மறுகூட்டல் என்ற பெயரில் பாஸ் செய்ய வைக்கப்படுவதும் நடந்திருக்கிறது. இது மட்டுமல்ல, குறைந்த மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் பலரையும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வைத்து 90 சதவீதத்துக்கு மேல் மார்க் போட்ட கதைகளும் உண்டாம்.

பேப்பர் திருத்தும் பணிக்கு வரும்போதே, ' இன்று திருத்தும் பேப்பர்ல பாதிக்கு பாதி பெயில் ஆக்கிடுங்க...' என்று உமாவிடமிருந்து உத்தரவு வருமாம். அதேபோல மறுகூட்டல் நடக்கும்போது, பணம் கொடுத்தவர்கள் பட்டியல் பேப்பர் திருத்தும் பேராசிரியர் கையில் இருக்குமாம். எந்த நெம்பருக்கு எவ்வளவு மார்க் போட வேண்டும் என்பது வரை லிஸ்ட் கொடுத்திருப்பார்களாம்.
தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு விவகாரத்தில் பேராசிரியர்கள் விஜயக்குமார், சிவக்குமார் ஆகிய இருவர்தான் அதிகமாக உமாவுடன் தொடர்பில் இருந்த செல்போன் ஆதாரங்கள் கிடைத்திருக்கிறதாம். இவர்கள் இருவரிடமிருந்துதான் மற்ற பேராசிரியர்களுக்கு உத்தரவு போகுமாம். வசூல் செய்யப்படும் பணத்தில் 60 சதவீதம் உமாவுக்கு. மீதி 40 சதவீதம் உமாவின் உத்தரவுக்கு செவி சாய்த்து உடந்தையாக இருக்கும் பேராசிரியர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டதாம்.
உமா மட்டுமல்லாமல், கடந்த 3 வருடங்களில் யாரெல்லாம் பேப்பர் வேல்யூவேஷனுக்கு வந்தார்கள் என்ற பட்டியலையும் லஞ்ச ஒழிப்புத் துறை கேட்டிருக்கிறதாம்" 



"உமாவுக்குப் பின்னால் அரசியல் பின்புலம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். உமா என்பது அம்பு மட்டும்தான். அவருக்கு மேல இருக்கும் சில அரசியல் சக்திகள் கொடுத்த அட்வைஸில்தான் உமா இப்படிச் செய்திருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, உமாவுக்கு அடுத்து துணைவேந்தர் ஆக வேண்டும் என்பதான் கனவு. அதுக்குக் கோடி கோடியாகக் கொடுத்தாக வேண்டும். அதை சம்பாதிக்கும் நோக்கத்துடன்தான் இப்படி இறங்கிவிட்டார் என்று சொல்கிறார்கள். எப்படியோ பாதிப்பு மாணவர்களுக்கும் அண்ணா பல்கலையின் நற்பெயருக்கும்தான்!" 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here