மகாராஷ்ட்ராவில் உள்ள காஸ்மோஸ் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வங்கிகள் பெயரைச் சொல்லி யாராவது ஏடிஎம் பின் நம்பர், ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என வங்கி சார்பில் நமக்குப் பலமுறை எச்சரிக்கை வந்திருக்கும். ஆனால், வங்கியிலே திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் அமைந்துள்ள காஸ்மோஸ் வங்கியின் மெயின் சர்வரை ஹேக் செய்து பணத்தை ஹேக்கர்கள் ஆன்லைன் வழியாக திருடிவிட்டதாக வங்கி சார்பில் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் 11ஆம் தேதி வங்கியின் சர்வரை ஹேக்கர்கள் ஹேக் செய்து 78 கோடி ரூபாயை வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் வெவ்வேறு நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5 கோடி ரூபாய் மட்டும் இந்தியாவில் உள்ள கணக்கில் பரிவர்த்தனை ஆகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வரை மீண்டும் ஆய்வு செய்த ஹேக்கர்கள் 14 கோடி ரூபாயை ஹாங்காங்கில் உள்ள ஏஎல்எம் டிரேடிங் லிமிடெட் நிறுவன வங்கிக் கணக்குக்கு மாற்றி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புனே சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக