*தமிழகம் முழுவதும் 95 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது* தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ரூ.36,900-1,16,600 என்ற ஊதிய நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.56,900-1,80,500 என்ற ஊதிய நிலையில் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*தமிழகம் முழுவதும் 95 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது* தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ரூ.36,900-1,16,600 என்ற ஊதிய நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.56,900-1,80,500 என்ற ஊதிய நிலையில் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது*


   


*சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி தமிழகத்தில் 95 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது*
*கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவையில் 2018-19ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 95 பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது*
*இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது*
*இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 5 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன
*நடப்பு கல்வி ஆண்டில் 95 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன*


*இவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ரூ.36,900-1,16,600 என்ற ஊதிய நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.56,900-1,80,500 என்ற ஊதிய நிலையில் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது*
*தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கலைப் பிரிவு தொடங்கப்பட்டு ஊரகப் பகுதியில் உள்ள பகுதிகளில் 15 மாணவர்களும், நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளில் 30 மாணவர்களும் அந்த கலைப் பிரிவில் சேர்ந்தால், அந்த வகை பள்ளிகளுக்கு கூடுதலாக 3 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (வரலாறு, பொருளியல், வணிகவியல்) பாடவாரியாக இரண்டாம் கட்டமாக ஒப்பளிப்பு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்*
*புதிதாக 500 ஆசிரியர் பணியிடம்சட்டப் பேரவையில்* *நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பில் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்தின் பேரில் 95 ஊராட்சி ஒன்றிய , நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது*


*அத்துடன் 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை புதியதாக உருவாக்கியும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேற்கண்ட பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் உருவாக்கப்படுகிறது*
*மேலும் தரம் உயர்த்தப்பட்டுள்ள பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 100 பள்ளிகளுக்கு 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படுகிறது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here