*அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது*
*மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் சம்மந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் வாங்க வேண்டும்*
*அந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ளவேண்டும். தொடக்க கல்வித்துறைக்கு கீழே இருக்க கூடிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் பெறவேண்டும்*
*உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளாக இருந்தால் தனியார் பள்ளி இயக்குநரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டும்.ஆனால் தமிழகம் முழுவதும் கட்டிட அங்கீகாரம் வாங்காத 5000 பள்ளிகள் இயங்கி வருகிறது*
*குறிப்பாக மெட்ரிகுலேஷன் இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 2000 பள்ளிகள், தொடக்க கல்வித்துறைக்கு கீழே உள்ள 2000 பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1000 பள்ளிகள் என 5000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவருகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்*
*இலவசம் மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் கீழ் எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் இயங்க கூடாது. அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது சட்டத்திற்கு எதிராது*
*மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு 5000 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக