*அறிவியல் படிப்புகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். பிளஸ்2வில் எந்த பாடப்பிரிவு படித்தவர்களுக்கும் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் இருக்கிறது*
*இந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. 50 சதவீதத்திற்கு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட கலை அறிவியல் கல்லூரிகளில் படித்து அரசு பணியில் சேர வாய்ப்புகள் இருக்கிறது*
*இதற்கு மாணவர்களின் தனி கவனம் மற்றும் தேர்வு செய்யும் பாடங்கள் தான் முக்கியம். எது நாம் எளிதாக கற்க கூடிய பாடப்பிரிவு என்பதை அறிந்து அதனை மாணவர்கள் தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம்*
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 8667802578 என்ற வாட்ஸ் எண்ணை உங்கள் குழுவில் இணைத்துக்கொள்ளுங்கள்
*கலை அறிவியல் பாடப்பிரிவில் படித்தவர்களில் ஏராளமானோர் தற்போது அரசு பணியில் எளிதாக நுழைய முடியும். சமீபத்திய கணக்கெடுப்பின்படி பொறியியல் கல்லூரி மாணவர்களைவிட கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தான் அதிகளவில் அரசு பணியில் சேர்ந்துள்ளனர்*
*எனவே, அரசு பணியில் சேர விருப்பம் உள்ள மாணவர்களுக்கும் கலை அறிவியல் பாடங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். தற்போது வளர்ந்து வரும் மற்றும் மாணவர்களை கவர்ந்து வரும் சில முக்கியமான கலைக்கல்லூரி பாடங்களை பார்ப்போம்*
*பொதுவாக கலைப்பிரிவு மாணவர்களின் முதல் தேர்வு பி.காம், பி.காம் சிஏ உள்ளிட்டவையும், அறிவியல் பிரிவு மாணவர்களின் முக்கிய தேர்வாக பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், கணிதம் மற்றும் வேளாண் படிப்புகள், பிஏ தமிழ், ஆங்கிலம் இலக்கியம் உள்ளிட்டவை இருக்கிறது. இவை பொதுவான கலை அறிவியல் படிப்புகள்*
*இதனை படித்தவுடன் வேலை நிச்சயம். அரசு பணிக்கும் எளிதாக தயாராக கூடிய படிப்புகள். இவை தவிர தற்போது மாணவர்களை கவரும் வகையில் சில படிப்புகள் இருக்கிறது. பிஎஸ்சி பேஷன் டிசைனிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, விஷூவல் கம்யூனிகேஷன் உள்பட ஏராளமான பிரிவுகள் கலை அறிவியல் பாடப்பிரிவுகளில் கொண்டுவரப்பட்டுள்ளது*
*குறிப்பிட்ட சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசு பணிக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதனால், அரசு பணியில் சேர கலை அறிவியல் படிப்புகள் சிறந்தது என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக