*இடப்பற்றாக்குறை உள்ள, 746 பள்ளிகளுக்கான அங்கீகாரம், அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது*
*பள்ளிகளின் உள்கட்டமைப்பு தொடர்பாக, கல்வியாளர் சிட்டிபாபு குழு, சில பரிந்துரைகளை அளித்தது. அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகள், நிலம் தொடர்பாக புதிய விதிமுறைகளை நிர்ணயித்து, 2004-ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது*
*மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என, ஒவ்வொரு பகுதியிலும், பள்ளிகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கு நிலம் இருக்க வேண்டும்*
*ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில், இட நெருக்கடி உள்ளதால், சிட்டிபாபு குழுவின் பரிந்துரைகளை, பல பள்ளிகளால் பின்பற்ற முடியவில்லை. மேலும், 2004ல், சட்டம் வரும் முன்னரே, பல தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த பரப்பை விட குறைந்த பரப்பில், பள்ளிகளை நடத்தி வருகின்றன*
*இந்த அடிப்படையில், 746 பள்ளிகளுக்கு இட பற்றாக்குறையால், அங்கீகாரம் வழங்கப்படவில்லை*
*உடன், இப்பள்ளிகள், நீதிமன்றத்தை அணுகின*
*அதனால், இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், தற்காலிக அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது*
*2017 - 18க்கான அங்கீகாரம், இந்த ஆண்டு மே, 31ல் முடிந்தது. இதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு, 2019 மே வரை, தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்கி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக