*WHATSAPP NUMBER 8667802578
*தமிழகத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்ட தேசிய பசுமை படை நிதியை, இந்தாண்டு முதல் பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது*
*அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் தேசிய பசுமை படைகளுக்கு ஆண்டுதோறும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியை மத்திய சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 பள்ளிகள் இந்நிதியை பெறுகின்றன*
*உலக சுற்றுச்சூழல், இயற்கை, ஓசோன் உட்பட உலக அளவில் கடைபிடிக்கப்படும் 16 வகை தினங்கள் மற்றும் மாணவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணிகளுக்கு இந்நிதி செலவிடப்படுகிறது*
*இதுவரை மாநில அளவில் 8500 பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி மாவட்ட அலுவலங்கள் (டி.இ.ஓ.,) மூலம் இந்நிதி வழங்கப்பட்டது*
*ஆனால் இந்தாண்டு முதல் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்க மத்திய சுற்றுச்சூழல் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது*
*இதுகுறித்து பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், ''மாணவர்கள், பள்ளிகள் விவரங்களை கல்வி அதிகாரிகள் மூலம் சுற்றுச்சூழல் துறை பெறும் நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் உட்பட சில காரணங்களுக்காக இந்தாண்டு முதல் இந்நிதியைபள்ளிக்கே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதுதொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக