சூரியக் குடும்பம் பற்றிய சில குறிப்புகள்:
1. நாம் வாழும் சூரியக் குடும்பத்தில், ஒரு நட்சத்திரம் (சூரியன்), எட்டுக் கோள்கள், ஐந்து குறுங்கோள்கள் (Dwarf கோள்கள்), 181 நிலாக்கள், 5,66,000 சிறிய கோள்கள் (Asteroids), 3,100 வால் விண்மீன்கள் (Comet) இருக்கின்றன.
2. சூரியக் குடும்பத்தில் அனைத்துமே சூரியனையே சுற்றி வருகின்றன.
3. சூரியக் குடும்பத்தின் அளவு, பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவை விட 1,25,000 மடங்கு பெரியது!
4. சூரியக் குடும்பத்தின் அளவில் 99.86% சூரியனில் இருக்கிறது!
5. சூரியனுக்கு அருகில் இருக்கும் நான்கு கோள்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை.
6. மீதமுள்ள நான்கு கோள்கள் வாயுவால் ஆனவை!
7. மெர்க்குரிதான் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள். ஆனால், அங்கு வளி மண்டலம் இல்லாத காரணத்தால், வீனஸ்தான் மிகவும் வெப்பமான கோளாகக் கருதப்படுகிறது.
8. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய நிலவின் பெயர் Ganymede.
9. வியாழன் (ஜுபிட்டர்), சனி (ஸடர்ன்) ஆகிய கிரங்கள் முழுவதும் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனது.
10. யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்கள் பனிக்கட்டியால் ஆனவை!
- ஆஸிஃபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக