🔰🔰சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔰🔰சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்*

*🌐தொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது*

*🌐தமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன*

*🌐அதேபோல, ஆசிரியர்களின் நியமனம், பதவி உயர்வு குறித்த பிரச்னைகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நிர்வாக பணிகள் போன்றவற்றிலும், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இந்தப் பணிகளின் நிலைமை என்ன; அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சி.இ.ஓ.,க்கள் மற்றும் டி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது*

*🌐இதற்கான கூட்டம், வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்*

*🌐இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், தங்கள் மாவட்ட, பள்ளிகளின் வழக்குகள் நிலை, பள்ளி வாரியாக ஆசிரியர் காலியிட விபரம், உள்பட, 29 வகை பட்டியல்களை, வரும், 6ம் தேதிக்குள், deemeetingagendagmail.com என்ற முகவரிக்கு அனுப்ப, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here