-------------------——----—----—---—-—--—--—-—
மாணவ மாணவியின் பிறந்த நாளில் மாற்றம் செய்தால் அவர்கள் படித்து பெற்ற பட்டங்கள் அனைத்தும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். வழக்கி்ன் விசாரணை வெள்ளியன்று (3.8.18) நீதிபதி எஸ்.வைத்திய நாதன் முன்பாக வந்தது. அந்த வழக்கில், அவரின் பெற்றோர்கள் பள்ளியில் முதல் வகுப்பில் சேருவதற்காக, தனது பிறந்த நாளை இரண்டு மாத காலத்திற்கு முன்கூட்டியே குறிப்பிட்டுள்ளதாகவும், எனவே அதை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் வேண்டுகோளை பரிசீலித்த நீதிபதி எஸ்.வைத்திய நாதன் கூறுகையில், மாணவியின் உண்மையான பிறந்த நாள் ஜீலை 17,1997 ஆகும். ஆனால், இரண்டு மாதம் முன்தள்ளி அவரது பிறந்த நாள் மே மாதம் 17.1997 ஆக அவரது பள்ளி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய வேண்டுகோளை ஏற்று பிறந்த நாளை மாற்றுவதற்கு அனுமதித்தால், அது அவருடைய மொத்த கல்வித்தகுதியுமே அழிப்பதற்கு சமமாகும். ஏனெனில் அவர் தேதியை மாற்றினால் மாற்றப்பட்ட தேதி ஜீலை 17.1997ன் படி, அவர் பள்ளியின் முதல் வகுப்பிலேயே நுழைவதற்கு தகுதியற்றவர் ஆகிறார்.
வேறு எந்த காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறந்த தேதியை மாற்றினால் அவரது மொத்த கல்வித் தகுதிகளுமே சட்டத்தின் பார்வையில் ஒன்றுமில்லாது அழிந்து விடும். அவர் கல்வித் தகுதியற்றவராக கருதப்படுவார் எனத் தெரிவித்து, மாணவியின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக