பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை எளிமையாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திட்டம் ஒன்றை மனிதவள மேம்பாட்டுத்துறை வகுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக, அந்தக் குழு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நாடு முழுவதும் கடந்த 2009ஆம் ஆண்டின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தைப் பின்பற்றாத பள்ளிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகள் மூடப்பட்டதால், ஏராளமான சிறார்கள் கல்வி பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டுமெனில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளையும், மாநில அரசுகள் பிறப்பித்துள்ள விதிகளையும் பின்பற்றியாக வேண்டும். இதனால், பல பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில அரசு உதவி பெறாத பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.எனவே, பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைஎளிமைப்படுத்தப்பட வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக சுதந்திரமான அமைப்பு ஒன்றை மனித வள மேம்பாட்டுத் துறை உருவாக்க வேண்டும்.
இதுதொடர்பாக, மாநில அரசுகளுடன் விவாதித்து எளிமையான, நடைமுறைக்கு உகந்த திட்டத்தை மனித வள மேம்பாட்டுத் துறை உருவாக்க வேண்டும்” என்றுநாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக