சென்னை: வாழ்க்கை முழுக்க போராடிய திமுக தலைவர் கருணாநிதி, இறந்த பின்பும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரை மெரினாவில் அடக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழகம் முழுக்க மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.
காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
இளைஞர் பருவத்தில் போராடினார்
இளைஞர்
இளைஞர்
கருணாநிதியின் இளைஞர் பருவ கால போராட்டங்கள் உலகம் அறிந்தது. மாணவராக இருந்த போது போராடினார். அரசியல் பாலபாடம் படித்த போதே, ஹிந்திக்கு எதிராக போராட்டினார். பின் வரிசையாக பல ஆயிரம் போராட்டங்களில் கலந்தும் கொண்டும், முன்னின்றும் போராட்டம் நடத்தி இருக்கிறார்.
உயிர் போராட்டம்
உயிருக்காக போராட்டம்
உயிருக்காக போராட்டம்
அதேபோல் கடந்த இரண்டு வாரமாக திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து தனது உடல் குறைபாடுகளுடன் போராடி வந்தார். 95 வயதிலும் அவர் மிக தீவிரமாக போராடி வந்தார். அவரது உடல்நிலையில் மிக மோசமாக இருந்த போதும், கடைசி வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டு போராடி வந்தார். ,மருத்துவர்களே அவரை பார்த்து வியப்படைந்தனர்.
இப்போது
மீண்டும்
மீண்டும்
இதோ இப்போது இறந்த பின்பும் போராடி வருகிறார். தமிழக தலைவர்கள் அலங்கரித்த மெரினாவில் தனக்கான இடத்தை, தனக்கான அங்கீகாரத்தை வேண்டி இறந்த பின்பும் அமைதியின் சாட்சியாக போராடி வருகிறார். பிறந்ததில் இருந்து போராடி பழகியவர், இதோ இப்போதும் விடாமல் போராடி வருகிறார்.
மக்கள்
மக்கள் நிற்கிறார்கள்
மக்கள் நிற்கிறார்கள்
மக்களுக்காக போராடிய அவருக்காக இப்போது மக்கள் போராடி வருகிறார்கள். இட ஒதுக்கீடு கேட்டு போராடியவருக்கு இப்போது இட ஒதுக்கீடு அளிக்க திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் தமிழகம் முழுக்க போராடி வருகிறார்கள். இதனால் தமிழகம் முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக