தமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார்.
200 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளா கம், தனியார் பள்ளிகள் மற்றும் அமைப்புகள் மூலம்புனரமைக் கப்பட்டு மாதிரிப் பள்ளியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளியின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாதிரிப் பள்ளியின் ஆய்வுக்கூடம், நூலகத்தை திறந்துவைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன்,இப்பள்ளியில் படித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும் பவானி சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர் களிடம் செங்கோட்டையன் கூறிய தாவது:நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி தரப் படவில்லை. எனவே, இந்தாண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவ,மாணவியரின் முழுப் பாதுகாப்புக்காக இந்தியா விலேயே முதன்முறையாக உதவி தொலைபேசி எண் (14417) வழங்கப்பட்டுள்ளது.அடுத்த மாத இறுதிக்குள் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் “ஸ்மார்ட் வகுப்புகள்” தொடங்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக பிளஸ் 2-வுடன் 12 புதிய பாடத்திட்டங்கள் இணைக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம் அங்கான்வாடி மையங்களில் எல்.கே.ஜி.., யு.கே.ஜி. ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்