துப்பாக்கி சுடுதலில் அசத்தும் இந்தியர்கள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

துப்பாக்கி சுடுதலில் அசத்தும் இந்தியர்கள்!




18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா இதுவரை வென்றுள்ள 10 பதக்கங்களில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் 6 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது இந்தியா இதில் மேலும் சில பதக்கங்களை வெல்லத் தயாராகி வருகிறது.


இன்று (ஆகஸ்ட் 22) காலை மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கேர் 585 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ரஹி சர்னோபத் 580 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

மகளிர் 50 மீட்டர் ரைஃபில் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட அஞ்சும் மவுட்கில், காயத்ரி நித்யானந்தம் இருவரும் குறைவான புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினர்.

டென்னிஸ் - பதக்கம் உறுதி

மகளிருக்கான டென்னிஸ் போட்டியின் இரண்டாம் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரைனா அங்கிதா, ஹாங்காங்கின் யூடிஸ் வாங் சாங்கை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் யூடிஸை வீழ்த்தி அங்கிதா அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் டென்னிஸில் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

ஆண்கள் ஒற்றையருக்கான ரவுண்ட் ஆஃப் 16 பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், உஸ்பெகிஸ்தானின் ஜுராபேக் கரிமோவிடம் 6-3, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here