கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேபாள நாட்டு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டிலுள்ள பரத்பூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் நியூபானே. இவர் கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிற்நோயியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அங்கேயே செயல்பட்டு வரும், சர்வதேச மாணவர்களுக்கான விடுதியில் தங்கி பல்கலைக்கழகம் சென்று வந்துள்ளார்
.
.
இந்த நிலையில், திடீரென்று சந்தோஷ் நியூபானே விடுதி அறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் கணசேன் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சந்தோஷ் நியூபானேவின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சந்தோஷ் நியூபானே தனது ஊரைச் சேர்ந்த பெண்னை ஒரு தலையாக காதலித்து வந்ததும், காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆர்.எஸ் புரம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விடுதி காப்பாளர், சந்தோஷ் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.