1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு என்ன ஆனது? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

1 கோடி பேர் விண்ணப்பித்த RRB NTPC தேர்வு என்ன ஆனது?



RRB NTPC தேர்வு என்ன ஆனது? 35 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1 கோடி பேர் … இந்த வருடம் தொடக்கத்தில் ரயில்வே துறையில், தொழில்நுட்பம் அல்லாத பணிக்கு 35 ஆயிரம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கு 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த தேர்வு குறித்து எந்த அப்டேட்டும் வரவில்லை.


எனப்படும் , இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் (NTPC) காலியாக உள்ள 35 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதாக அறிவித்தது.
இதற்கான விண்ணப்பப்பிவு மார்ச் 1ம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடந்தது. ஒட்டு மொத்தமாக 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டதால், சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
NTPC பணிக்கான முதற்கட்ட கணினித்தேர்வு ஜூன்-செப்டம்பர் இடையே நடைபெறும் என்று உத்தேச தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தேர்வுக்காக விண்ணப்பித்த அனைவரும் முழுவீச்சில் தயாராகி வந்தனர். ஆனால், செப்டம்பர் முடியும் தருவாயில், இன்று வரையில், தேர்வு குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.


இந்த மாதமும் தேர்வு விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றால், தேர்வுக்காக விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதமும் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ரயில்வே தேர்வு வாரியத்தின் தகவல்படி, இந்த தேர்வுக்காக மொத்தம் 1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 88 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

செப்டம்பர் இறுதி வந்த பிறகும், NTPC தேர்வு அறிவிக்கப்படவில்லை, தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பற்றியும் தகவல் வராததால், விண்ணப்பித்த அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பட்டதாரிகள், பன்னிரெண்டாம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் என பிரிவு வாரியாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் நிலை என்னவென்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Subscribe Here