CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!



CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியாவில் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தி வருகிறது.


இந்தாண்டு மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரையில் நடைபெற்றது. செப்டம்பர் 18ம் தேதி விண்ணப்பப் பதிவு முடியும் போது, விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 25ம் தேதி (இன்று) வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி வரையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
முக்கிய நாட்கள்:

விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 19 ஆகஸ்ட் 2019

விண்ணப்பப்பதிவு முடியும் நாள்: 30 செப்டம்பர் 2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 3 அக்டோபர் 2019

பதிவு செய்த விண்ணப்பத்தை திருத்துவதற்கான நாள்: 4-10 அக்டோபர் 2019

CTET தேர்வு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான நாள்: நவம்பர் 3 வது வாரம்

தேர்வு நடைபெறும் நாள்: 8 டிசம்பர் 2019

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: தேர்வு தேதியிலிருந்து ஆறு வாரத்திற்குள்ளாக முடிவுகள் வெளியிடப்படும்.

Subscribe Here