அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம்



சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எம்.ஐ.டி. சி.இ.ஜி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி. வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மற்றும் அதன் இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் பகவத் கீதை பாடம் அறிமுகம் செய்துள்ளதற்கு திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியலை விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்ப பாடமாக வழங்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் என அண்ணா பல்கலை. துணைவேந்தர்  சூரப்பா தெரிவித்துள்ளார்.

Subscribe Here