மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
கள உதவியாளர் - 01
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 02
கல்வித் தகுதி:
கள உதவியாளர் - 12-வது தேர்ச்சி
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
கள உதவியாளர் - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
கள உதவியாளர் - ரூ.16,182
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - ரூ. 31,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 05.10.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Division of Genetics IARI Pusa Campus\, New Delhi - 110012.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iari.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்