டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அமைப்பு மற்றும் தேர்வுக்குரிய பாடங்களில் மாற்றம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அமைப்பு மற்றும் தேர்வுக்குரிய பாடங்களில் மாற்றம்




டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அமைப்பு மற்றும் தேர்வுக்குரிய பாடங்களில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-2 தேர்வு தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இதில், நேர்முகத்தேர்வு உடன் கூடிய குரூப்-2 மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 தேர்வுகள் உள்ளன. இவை இரண்டும் இதுவரை தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டு முதல் இரண்டு தேர்வுகளும் ஒன்றாக நடத்தப்படுகின்றன
.
இதில் குரூப் 2 தேர்வுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளும் குரூப் 2 தேர்வுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மட்டும் நடத்தப்படும். மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். மேலும் முன்னதாக குரூப் 2 தேர்வில் பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால், வரும் ஆண்டு முதல் பொதுத்தமிழ் நீக்கப்பட்டுள்ளது பொது அறிவு மற்றும் கணிதம் பாடத்தில் இருந்து அனைத்து கேள்விகளும் கேட்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Subscribe Here