நீரில் மிதந்தபடி 37 ஆசனங்கள் செய்து அசத்தும் 3ம் வகுப்பு மாணவி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீரில் மிதந்தபடி 37 ஆசனங்கள் செய்து அசத்தும் 3ம் வகுப்பு மாணவி




விருதுநகர்: விருதுநகரில் நீரில் மிதந்தபடி 37 வகையான ஆசனங்களை செய்து 3ம் வகுப்பு மாணவி அசத்தினார். விருதுநகர், ஆர்.எஸ்.நகர் கார்த்தீஸ்வரன் மகள் நவநீதாஸ்ரீ (9). தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார். இவர் 4 வயது முதல் யோகா கற்று வருகிறார். இவர் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி நீச்சல் குளத்தில் நீரில் மிதந்தபடியே த்ரிவிக்ரமாசனம், கூர்மாசனம், ரஜபாத தண்டையாசனம், விபத்தபட்சி மோத்தாசனம், ஜடாதிதபரிவத்தன ஆசனம், பாதகேனாசனம் உள்ளிட்ட 37 வகையான ஆசனங்களை நேற்று செய்து காட்டினார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் நீரில் மிதந்தபடி 37 வகையான ஆசனங்களை, 5 நிமிடங்கள் 56 நொடிகளில் செய்து காட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.மாணவி நவநீதாஸ்ரீ கூறுகையில், ‘‘6 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறேன். மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். தண்ணீரில் மிதந்தபடி யோகாசனங்களை செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் 6 மாதங்கள் நீச்சல் பயிற்சி, மூச்சுப்பயிற்சி, அத்துடன் யோகாசன பயிற்சி பெற்றேன்’’ என்றார். ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் பொன்ராஜ் செய்திருந்தார்.

Subscribe Here