புதுடெல்லி:
செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’ உருவாக்கிய ‘மங்கல்யான்’ என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பியது.
450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
சூரியனைச் சுற்றி சுமார் 680 மில்லியன் கிலோமீட்டர் பயணத்தை 300 நாட்களில் பூர்த்தி செய்த மங்கல்யான், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.
செவ்வாய் கிரகத்தின் அமைப்பு தொடர்பாகவும் அங்கு அடிக்கடி உண்டாகும் புயல்கள் தொடர்பாகவும் பல ஆயிரக்கணக்கான அரிய புகைப்படங்களை மங்கல்யான் அனுப்பி வைத்தது.
"இஸ்ரோ தலைவர் கே.சிவன்" width="100%" />
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் கே.சிவன், ‘ஆரம்பகட்டத்தில் வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்ட மங்கல்யான் விண்கலத்தின் சாதனை பயணம் இன்று வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
2 டெர்ராபைட் அளவுக்கு மங்கல்யான் அனுப்பிய புகைப்படங்களின் மூலம் உலக வரைப்படம் போல் செவ்வாய் கிரகத்தின் வரைப்படங்களை 23 தொகுப்புகளாக இஸ்ரோ உருவாக்கி சேமித்து வைத்துள்ளது.
இன்றளவும் பல்வேறு படங்களை அனுப்பி வைக்கும் மங்கல்யான் இன்னும் சில காலத்துக்கு செயல்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மங்கல்யான்-2 திட்டம் எந்த அளவில் உள்ளது? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதுதொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவித்தார்.