நாளை முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நாளை முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்




பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் திங்கள்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளதால், வரும் அக்.2-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவருக்கான காலாண்டு தேர்வுகள் கடந்த செப்.13- ஆம் தேதி தொடங்கியது.  இந்த நிலையில் தேர்வுகள் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து செப். 24 முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது.
பின்னர் அக். 3-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள்
திறக்கப்படவுள்ளது.
முன்னதாக, காந்தியின் 150- ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்படவுள்ளதாகவும், விடுமுறை நாள்களில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும், காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக்கொள்ளலாம் என
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Subscribe Here