அருப்புக்கோட்டை: தேசிய திறனாய்வு தேர்வு 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வு ஆகும். இதில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவி தொகை மாதந்தோறும் கிடைக்கும். மாணவர் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு வரை உதவி தொகை உண்டு.மாநில அளவில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும். இதில், வெற்றி பெறும் முதல் ஆயிரம் பேருக்கு ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை மத்திய அரசு வழங்கும்.இந்த ஆண்டு தேர்வு மாநில அளவில் தமிழகத்தில் நவம்பர் 3 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வை பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டும் எழுதலாம். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க எ.ஏன்.டி., அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இதுகுறித்து தெரிந்து கொள்ள அறக்கட்டளை நிர்வாகி ஜெயராஜசேகரிடம் தெரிந்து கொள்ளலாம்.89409 79078 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.