PSG கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்தார்களா? மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

PSG கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்தார்களா? மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்




PSG கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்யவில்லை: மருத்துவக் கல்வி இயக்குநர்
கோவை மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பெயரில் இருவரும் மதுரை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆள்மாறாட்டத்திற்கு மூல காரணமாக இருந்த தரகரை கேரளாவில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் மேலும் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு செய்து சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவ கல்வி இயக்குநர், நீட் தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவர்கள், நீட் தேர்வின் போது பயன்படுத்திய புகைப்படத்திற்கும், நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக புகார் எழுந்தது. செப்டம்பர் 23ம் தேதி இந்த புகார் வந்தது.
இதையடுத்து ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, மாணவர்கள், பெற்றோர்களிடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது புகார் சுமத்தப்பட்ட மாணவர்களின் கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டை, நீட் நுழைவுச்சீட்டு, அலாட்மெண்ட் ஆர்டர், மதிப்பெண் சான்றிதழ் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் அவை அனைத்தும் சரியாக இருப்பது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் எந்த முறைகேடும் செய்யவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன்பிறகும் ஏதாவது சந்தேகம் எழும்பட்சத்தில், நாங்களே காவல்நிலையத்தில் புகார் அளிப்போம்.
மேலும், நீட் தேர்வின் போது மாணவர்கள் அளிக்கும் போட்டோவில் சில நேரங்களில் வேறுபாடு இருப்பது போன்று தோன்றுவதால் தான் இது போன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் நீட் தேர்வுகள் நடக்கும் போது புகைப்படத்துடன், கைரேகை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவும் கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கைரேகை பதிவு இயந்திரம் முறை கொண்டு வரப்படும் போது இது முறைகேடுகள் எதுவும் நடைபெறாது.
பயோ மெட்ரிக் முறை நீட் தேர்வு தொடக்கத்தில் இருந்து மாணவர்கள் கல்லூரியில் சேரும் வரை அமல்படுத்தப்படும். இதில் முறைகேடே நடைபெறாது’. இவ்வாறு நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

Subscribe Here