அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி




நீண்ட காலமாகவே மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மிகவும் மவுசு அதிகமாக இருந்து வருகிறது. சிறுவயதில் படித்துக் கொண்டிருக்கும் போதும் டாக்டர் ஆக வேண்டும், இன்ஞினியர் ஆக வேண்டும் என்ற கனவைத்தான் தங்களுடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உருவாக்குவார்கள். வழக்கறிஞர், போலீஸ் போன்ற வேலைகள் சற்றே மதிப்பு குறைந்த வேலையாகக் கூட கிராமங்களில் கருதினார்கள். மருத்துவர் ஆகிவிட்டால் சமூகத்தில் அவ்வளவு மதிப்பு இருந்தது.
அதேபோல், இன்ஞ்சியர் என்றால் அவ்வளவு பெருமை. 
         
அதனால், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட தங்களுடைய பிள்ளைகளை அதிக செலவு செய்து மருத்துவம், பொறியியல் படிக்க வைக்கிறார்கள். வேலை வாய்ப்பு சிக்கல்கள் காரணமாக கடந்த சில வருடங்களாக பொறியியல் படிப்புகள் மீதான மவுசு குறைந்துள்ளது. இன்றளவும் மசு குறையாத ஒரே படிப்பாக மருத்துவம்தான் உள்ளது. இதில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளை தாண்டி 4 வருட நர்ஸ் படிப்புக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் அவ்வளவு கிராக்கி. 
தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க வைக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில், சில நேரங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது.
அதனால், பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும். அரசுக் கல்லூரிகளில் படித்தால் செலவு மிகவும் சொற்பமானதாகவே இருக்கும். இதுதான் மிக முக்கியமான காரணம். அத்துடன், அரசு மருத்துவக் கல்லூரிகளில் தரமான கல்வியும் இருக்கும். அடுத்தது, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவியாக இருக்கும்.
இதில், சிக்கல் என்னவென்றால் மருத்துவப் படிப்பை அரசுக் கல்லூரிகளில் படிக்க வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களில் கிட்டதட்ட பெரும்பாலானோர், தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவே வைக்கிறார்கள். ஏனெனில் அரசுப் பள்ளிகளில் படித்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியாது என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.
12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆப் அடிப்படையில் இடம் கிடைக்கும். 
அதனால் என்ன செய்கிறார்கள் என்றால், 12 ஆம் வகுப்பில் தங்களுடைய பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள். தங்களது பிள்ளைகளை எப்படியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்பது. அதற்காக எவ்வளவு கடன் பட்டாலும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து விடுகிறார்கள்.

அதேபோல், அதிக வசதி உடையவர்களும் தனியார் பள்ளிகளில்தான் தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.
அவர்களும் தங்களுடைய பிள்ளைகளை அரசு மருத்துவக் கல்லூரிகளில்தான் படிக்க வைக்க நினைக்கிறார்கள். அதற்கும், குறைவான கட்டணம் என்பதையும் தாண்டி தரமான கல்வி என்பதும் அதற்கு முக்கியமான காரணம்.
இந்நிலையில்தான், வழக்கு ஒன்றில் பேசிய நீதிபதி, “தமிழகத்தில் பள்ளி படிப்பிற்கு தனியார் நிறுவனங்களையும், மருத்துவ படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளையும் நாடுகிறார்கள். ஏன் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரக் கூடாது?” என்று கூறியுள்ளார்.
அத்துடன், “ஒவ்வொருவரும் டாக்டர் ஆக வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நாங்களும் டாக்டர் ஆகவே விரும்பினோம். அதிக மதிப்பெண்கள் கிடைக்காததால், நீதிபதிகள் ஆகிவிட்டோம்” நகைச்சுவையாக பேசினார்.

Subscribe Here