நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடக்கம்





 நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடங்கப்பட்டது 🙏

இன்று *12-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி* அளவில் *மிட்டூர் மற்றும் திருப்பத்தூர் CKS மணி ஆகிய இரு மையத்தில்* *தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) பயிற்சிப்* பட்டறை இனிதே துவங்கியது. இந்த விழாவில் *தலைமை ஆசிரியர்கள்* தங்களின் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு கலந்து கொள்ள இருக்கும் *மாணவர்கள்* மற்றும் *பெற்றோர்கள்,* அந்தந்த மையத்திற்கு  வருகைதந்து துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இரண்டு மையத்தில் சிறப்பாக NMMS வகுப்புகள் இனிதே துவங்கி வகுப்புகள் நடைபெறுகின்றன.

மேலும் மிட்டூர் மையத்தில் சிறப்புமிக்க இவ்விழாவிற்கு புதூர் மரிமானிகுப்பம் அ.ஜெகதீசன்,ப.ஆ தலைமை தாங்கினார், மைய ஒருங்கிணைப்பாளர்களில் ஜொள்ளகவுண்டனூர் பள்ளி மு.சிவக்குமார்,ப.ஆ, வரவேற்புரை வழங்கினார் மற்றும் இவ்விழா நிகழ்சியை லாலாபேட்டை பள்ளி கே.இரகு,ப.ஆ தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவை திருப்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் திரு.தாமோதரன், வட்டார கல்வி அலுவலர்கள் திரு.தென்னவன் மற்றும் திரு.உதயசங்கர்,ஆசிரியர் பயிற்றுனர்கள் திரு.சத்தியசுந்திரம், மிட்டூர், ஆண்டியப்பனூர் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,நடுநிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக சீரங்கப்பட்டி பள்ளி எம்.கிருஷ்ணன்,ப.ஆ நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள் மற்றும் வாழ்வின் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதையும் விளக்கி எதிர்கால தேர்வுகள், முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர். இனிதே NMMS பயிற்சி துவக்க விழா நிறைவு பெற்று பயிற்சி வகுப்புகள் இனிதே துவங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்க தொடங்கினர்.

இங்கனம்
மிட்டூர் மற்றும் திருப்பத்தூர்
ஒருங்கிணைப்பாளர்கள்

அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ
NMMS குழு திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம்.

Subscribe Here