ஜெர்மனியிலிருந்து மாணவிக்கு தபாலில் வந்த பரிசு குவியல்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜெர்மனியிலிருந்து மாணவிக்கு தபாலில் வந்த பரிசு குவியல்*





உண்மைக்கும்,நேர்மைக்கும் எப்போதும் பாராட்டு உண்டு



கல்லூரி முதல்வர் பேச்சு



    தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்    நேர்மையாக நடந்து கொண்ட மாணவிக்கு ஜெர்மனியில் இருந்து வந்த பரிசு குவியல் வழங்கி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.

                                   ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
இப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு  மாணவி மகாலெட்சுமி கீழே கிடந்த பணத்தை  நேர்மையுடன் ஆசிரியரிடம் எடுத்து கொடுத்த  தகவலை இணையத்தில் தெரிந்து கொண்டு   யோகானந்தன் புத்ரா  என்பவர் தபால் மூலம் ஜெர்மனியில் இருந்து 70க்கும் மேற்பட்ட பென்சில்கள்,30க்கும் மேற்பட்ட பேனாக்களையும் , கலர் பென்சில்கள் என 17 வகையான பரிசு பொருள்களை குவியலாக தபால் மூலம் பள்ளிக்கு அனுப்பி இருந்தார். பரிசுகளை தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்தி ராணி மாணவியிடம் வழங்கினார்.
அப்போது பேசுகையில் , நேர்மையாக,உண்மையாக  இருங்கள். இளம் வயதில் நல்ல பழக்கங்கள் ஏற்படுத்தி கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று பேசினார்.ஜெர்மனியில் இருந்து தபாலில் பரிசுகளை அனுப்பியவருக்கு மாணவி மகாலெட்சுமி அன்புடன் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார்.ஆசிரியை செலமீனாள் நன்றி கூறினார்.



பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்    நேர்மையாக நடந்து கொண்ட மாணவி மகாலெட்சுமியை பாராட்டி  ஜெர்மனியில் இருந்து யோகானந்தன் புத்ரா  என்பவர் தபால் மூலம் அனுப்பிய பரிசு குவியலை தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்தி ராணி வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

Subscribe Here