குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன்: ராகுல் காந்தி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன்: ராகுல் காந்தி





டெல்லி: ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டுள்ள குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் நேற்று முன் தினம் மாலை தவறி விழுந்து விட்டார். இதையடுத்து, சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 46 மணி நேரத்தை தாண்டி துரிதமாக நடைபெற்று வருகிறது.

நிலத்தை வேகமாக துளையிடும் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 2 மீ தொலைவில் குழி தோண்டப்பட்டு சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் இதுவரை 35 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. தற்போது 88 அடியில் குழந்தை இருப்பதால், 98 அடி வரை குழி தோண்டப்பட்டு அங்கிருந்து பக்கவாட்டில் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் 40 பேரும், மாநில பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் 30 பேரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிது கூட தொய்வில்லாமல் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுர்ஜித்தை மிட்க பொதுமக்கள் மதபேதமின்றி பிரார்த்தணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டுள்ள குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

While the nation celebrates Deepavali, in Tamil Nadu a race against time is underway to save baby Surjeeth, who has been trapped in a borewell since Friday. I pray that he will be rescued & reunited with his distraught parents at the earliest 🙏


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் வேளையில் தமிழகத்தில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டுள்ள குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட்டு விரைவில் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


Subscribe Here