மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த கிணறுகளை மூடவேண்டும் என்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த கிணறுகளை மூடவேண்டும் என்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு




ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் பரிதவிக்கும் விவகாரம் அனைவரையும் பதைபதைப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. சிறுவன் சுஜித்தை மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.
சென்னை:
தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இந்த நிலையில் சிறுவன் சுஜித் விவகாரம் எதிரொலியாக தமிழகத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும், இதுகுறித்து அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகள் குழுவை நேரில் அனுப்பி ஆய்வு நடத்தவேண்டும் என்றும், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த கிணறுகளை மூடவேண்டும் என்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார்.

Subscribe Here