JEE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

JEE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு!




ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு!
JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், திருத்திக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.



ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தொழில்நுட்பக்கழகம், என்ஐடி உள்ளிட்ட தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்பு சேருவதற்கு நுழைவுத்தேர்வு jeemain.nta.nic.in தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. ஒவ்வொரு கல்வியாண்டும் ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அந்தவகையில், 2020 கல்வியாண்டுக்கான ஜேஇஇ தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதற்காக செப்டம்பரம் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரையில்விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பலரும் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் தவறுகள், பிழைகள் செய்ததாக கருதும் மாணவர்களுக்கு தற்போது பிழைத்திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.


அதன்படி, மாணவர்கள் இன்று அக்டோபர் 14ஆம் தேதி முதல் ஜேஇஇ விண்ணப்பப்படிவத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். பிழைதிருத்தம் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20 ஆம் தேதியாகும். jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் இதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe Here