டெல்லியில் உள்ள ‘ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை 2 ஆண்டுகளுக்கு மூட வேண்டும்’ என பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி யோசனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பல வன்முறை சம்பவங்களும் நடந்தேறின. இந்த வன்முறை சம்பவங்களை ஒழிக்க பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முழுக்க முழுக்க இடதுசாரிகள் மற்றும் சமூகவிரோத சக்திகளின் கூடாரமாக மாறியுள்ளது. சமூகவிரோத சம்பவங்களை ஒடுக்கும் வகையில் இந்த பல்கலைக்கழகத்தை கண்டிப்பாக 2 ஆண்டுகள் மூட வேண்டும். சுபாஷ்சந்திரபோஸ் பல்கலைக்கழகம் என பெயரை மாற்றி மீண்டும் பல்கலைக்கழகத்தை திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.