உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்



உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்றதையடுத்து, இந்தியா 3 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
புடியான் (சீனா):
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
அதன்பின்னர் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் (வயது 20), 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், 250.8 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இப்போட்டியில் இந்திய வீரர் பன்வார் திவ்யன்ஷ் சிங் (வயது 17), 250.1 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் மொத்தம் 3 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா, பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

Subscribe Here