பஞ்சாபில் நடந்த தேசிய வில்வித்தை போட்டியில் மாமல்லபுரம் பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தைச் சோந்த விவசாயியான பன்னீர்செல்வம்- கலையரசி தம்பதியரின் மகள் பூர்விகா(12). இவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். வில்வித்தை போட்டியில் ஆர்வம் ஏற்பட்டு அதனை முறையாக கற்று மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்று உள்ளார். அத்துடன் 10 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம் மற்றும் பல கோப்பைகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான வில்வித்தை போட்டி பஞ்சாப் மாநிலம், கரியால் நகரில் நடந்தது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் வில்வித்தை போட்டியில் பங்கேற்ற மாணவி பூர்விகா வெள்ளிப்பதக்கம் வென்று
சாதனை படைத்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும், மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சங்கத்தினரும், அமைப்பினரும்,விளையாட்டு குழுவினரும் பாராட்டு தெரிவித்தனர்.
சாதனை படைத்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும், மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சங்கத்தினரும், அமைப்பினரும்,விளையாட்டு குழுவினரும் பாராட்டு தெரிவித்தனர்.