தட்பவெப்ப நிலையில் தாவரங்களை வளர்ப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விஞ்ஞானி வெற்றி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தட்பவெப்ப நிலையில் தாவரங்களை வளர்ப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விஞ்ஞானி வெற்றி





செவ்வாய் கிரகத்தின் நிகழும் தட்பவெப்ப நிலையில் தாவரங்களை வளர்ப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விஞ்ஞானி வெற்றி பெற்றுள்ளார்.
பராகுவே:
செவ்வாய்கிகரத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டுள்ளன. அங்கு மனிதர்களை குடியமர்த்த தனியார் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் அங்கு உணவு மற்றும் மருந்து வகை தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘செக்’ நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஜன் லுகாசெவிக்(29) என்பவர் இதற்கான ஆய்வை பூமியில் மேற்கொண்டார்.

பராகுவே பல்கலைக்கழக வாழ்வியல் அறிவியல் துறையின் குழுவினரும் இவருடன் சேர்ந்து ஆய்வு நடத்தினர். செவ்வாய் கிரகத்தின் நிகழும் தட்பவெப்ப நிலையில் மண் இன்றி குறைந்த அளவு தண்ணீரில் தாவரங்களை வளர்த்தனர்.
கடுகு, சாலட் இலைகள், முள்ளங்கி மற்றும் சமையலுக்கு உதவும் நறுமணச்செடிகள், புதினா போன்ற மருத்துவகுணம் நிறைந்த தாவரங்களை பயிரிட்டு பராமரித்தனர்.
அவர்களின் ஆய்வு வெற்றி பெற்றது. பலனாக அவர்கள் பயிரிட்ட தாவரங்களில் இருந்து கடந்த வாரம் அறுவடை செய்தனர். 

Subscribe Here