எந்த ஒரு நூலையும் தேசிய நூலாக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று யாரேனும் கோரிக்கை வைத்துள்ளார்களா? என மக்களவையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். அதற்கு, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என குஜராத் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை டிஜிபி ஸ்ரீகுமார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷான்க் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
மேலும், எந்த ஒரு நூலையும் தேசிய நூலாக அறிவிப்பதற்கான நடைமுறை தற்போது இல்லை எனவும் மத்திய அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.